WhatsApp ல் அறிமுகம் ஆக இருக்கும் புதிய அப்டேட் – உங்களுக்கும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க?

0
WhatsApp ல் அறிமுகம் ஆக இருக்கும் புதிய அப்டேட் - உங்களுக்கும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க?
WhatsApp ல் அறிமுகம் ஆக இருக்கும் புதிய அப்டேட் - உங்களுக்கும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க?
WhatsApp ல் அறிமுகம் ஆக இருக்கும் புதிய அப்டேட் – உங்களுக்கும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க?

WhatsApp செயலியில் சாதாரண பயன்பாட்டை தவிர்த்து தற்போதைய காலத்தில் பல்வேறு புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக கட்டண அம்சங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அப்டேட்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி அடிக்கடி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்காத காரணத்தினால் பிரீமியம் கட்டணம் விதிக்க சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரீமியம் பயனர்களுக்கு சில வகையான கட்டணங்களை வசூலிக்கும்படியான திட்டத்தை செயல்படுத்தலாம் என்று முன்னதாக திட்டமிட்டிருந்தது.

தற்போது வாட்ஸ்அப் பிரீமியம் சந்தா சேவை இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படாத நிலையில், பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜிஎஸ்எம் அறிக்கையின் படி, வாட்ஸ்அப் பீட்டா உறுப்பினர்கள் மட்டுமே பிரீமியம் மெனுவின் அனைத்து கூடுதல் அம்சங்களையும் அணுக முடியும். இந்த பிரீமியம் சந்தா வாட்ஸ்அப் மூலம் வணிகம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றும், சராசரி பயனருக்கு இதற்கான தேவைகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – வெளியான புதிய விதிமுறை!!

Exams Daily Mobile App Download

இதேபோல், பிரீமியம் சந்தா பயனர்கள் ஒரே கணக்கில் 10 ( MULTI DEVICE) சாதனங்கள் வரை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். மேலும், இதில், பணியாளர்கள் வணிகக் கணக்கை இணைக்கவும், நிர்வகிக்கவும் முடியும். கூடுதலாக, ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் இணைந்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் கட்டண சேவையின் விலை மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!