“சிறந்த காமெடியன்” அவார்ட் வாங்கிய விஜய் டிவி பாலா – மேடையில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்!

0
"சிறந்த காமெடியன்" அவார்ட் வாங்கிய விஜய் டிவி பாலா - மேடையில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்!
“சிறந்த காமெடியன்” அவார்ட் வாங்கிய விஜய் டிவி பாலா – மேடையில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்!

விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராக திகழ்பவர் பாலா. அவருடைய காமெடி பேச்சால் இந்த ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அவருக்கு “சிறந்த காமெடியன் அவார்ட்” கொடுக்கப்பட்டது. அப்போது அவர் செய்யும் சமூக சேவைகளை பற்றி அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

காமெடியன் பாலா:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக தங்களது திறமையை காட்டி ஏகப்பட்ட பிரபலங்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை என தற்போது கலக்கி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய புகழ் தற்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் தான் காமெடியன் பாலா. இவர் கலக்கப் போவது யாரு சீசன் 6ல் ஒரு போட்டியாளாராக கலந்து கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டி சென்றவர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த கோபி – அவரே வெளியிட்ட வீடியோ!

சின்னத்திரை மட்டுமல்லாமல் ஜுங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது (சிரிச்சா போச்சு) என பல நிகழ்ச்சிகளில் தனது பேச்சின் மூலமாக ஒரு அங்கமாக இருந்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருடைய முழு திறமையையும் வெளியே கொண்டு வந்தது. வாரந்தோறும் புது கெட்டப்பில் அவர் செய்யும் காமெடிகள் எல்லாம் மக்களை பெரிதும் கவர்ந்தது.

ExamsDaily Mobile App Download

அதனால் இந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அவருக்கு ‘பெஸ்ட் காமெடியன்’ விருது வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரிடம் இருந்து பாலா விருது பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் விழாவில் ரீல் லைஃப்பில் காமெடியான பாலா, ரியல் லைஃப்பில் செய்து வரும் சமூக சேவைகள் குறித்த தகவலும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது. பாலா பல மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறார், மேலும் முதியவர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். இதை தெரிந்ததும் அரங்கமே தங்களுடைய வாழ்த்துக்களை பாலாவிற்கு சொன்னது. மேலும் பாலா, இதை விட பெரிய அவார்ட் என்னனா… 100 பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்னு கடவுள்கிட்டயே சொல்றேன் என நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!