விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த கோபி – அவரே வெளியிட்ட வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த கோபி - அவரே வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த கோபி – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் தற்போது சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கோபி எப்போ சிக்குவீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முக்கிய சீரியல் ஆகும். இந்த சீரியலின் கதை பெண்களை மையப்படுத்தி இருந்தாலும் கதையின் கதாநாயகன் கோபி தான் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். கோபியாக நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பல முன்னணி சீரியல்களில் இவர் நடித்து இருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்கு தான் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு வந்தது.

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிய மிளா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனது மனைவி பாக்கியாவை இவர் செய்யும் கொடுமைகளை எல்லாம் பார்த்து தமிழகமே கொந்தளித்து வருகிறது. நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் அதில் நகைச்சுவை சேர்த்து அவர் நடிக்கும் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி இடைவெளி எடுத்துக் கொண்டு இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்துவிட்டேன் வயசாகிவிட்டது அதனால் தான் வார இறுதி நாளில் இடைவெளி எடுத்துக் கொண்டேன் என சொல்லி இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

மேலும் தனது ரசிகர்களுக்கு நன்றியை சொல்லி இருக்கிறார். ஏற்கனவே கோபி எப்போது சிக்குவார் என தமிழகமே எதிர்பார்த்து இருக்கும் நிலையில் சதீஷின் இந்த பதிவால் பலர் அதில் எப்போது மாட்டிக் கொள்வீர்கள், பாக்கியா பாவம் என பல கமெண்ட்களை பதிவு செய்துள்ளார். மேலும் ஒரு சிலர் அது வெறும் கதாபாத்திரம் தான் என நினைக்காமல் திட்டி குவித்து வருகின்றனர். கோபியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!