இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்? விரைவில் நடவடிக்கை!

0
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்? விரைவில் நடவடிக்கை!
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்? விரைவில் நடவடிக்கை!
இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்? விரைவில் நடவடிக்கை!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து தற்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அனைத்தும் நிரப்புவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏராளமான காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் ஊரடங்கால் முடக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதிப்பட்டனர். தற்போது தாக்கம் குறைந்து அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் வேலைவாய்ப்பின்மை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திர வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதியா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பபடும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய் கிழமை கூறினார்.

TN Job “FB  Group” Join Now

மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருக்கும் பிரதான், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்புவதற்கு இரு அமைச்சகங்களும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதி அளித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணிக்கு தேர்வு செய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் டி ராஜேந்தர் – அமெரிக்கா பயணம்! ரசிகர்கள் உருக்கம்!

அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவள நிலை குறித்து அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டவை, இவை மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இந்த முடிவின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!