UPSC 2022 முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு!

0
UPSC 2022 முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு - ஹால் டிக்கெட் வெளியீடு!
UPSC 2022 முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு - ஹால் டிக்கெட் வெளியீடு!
UPSC 2022 முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு!

இந்தியாவில் மத்திய அரசின் IAS, IPS உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படும் UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

UPSC தேர்வு:

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. கடந்த ஆண்டில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வை நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த UPSC முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 2022 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 11.52 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முதனிலை தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட முதன்மை தேர்வை எழுத தகுதி பெற்றனர். இவர்கள் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வை எழுத விண்ணப்பித்தனர். தற்போது முதன்மை தேர்வுக்கான தேர்வு கூட அனுமதி சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 16,17,18,24,25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இந்த தேர்வு தாய்மொழி, ஆங்கிலம் என மொத்தம் 9 தாள்களாக முதன்மைத் தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்த தேர்வர்கள் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். இந்த நேர்காணல் 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தற்போது வெளியாகி உள்ள ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் www.upsc.gov.inமற்றும் www.upsconline.inஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!