மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

நேபாளத்தில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் நுகர்வை குறைப்பதற்காக இரண்டு நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலித்து வருகிறது. அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க விலையுயர்ந்த கார்கள், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்யவும் நேபாள அரசு தடை விதித்துள்ளது.

இரண்டு நாள் விடுமுறை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலகமே உற்று நோக்கும் விஷயமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டம் என இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கையை போலவே நேபாளமும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை பயங்கர வேகத்தில் உயர்ந்து உள்ளது. மேலும் நேபாளம் அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எனவே, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என நேபாள அரசுக்கு நேபாள மத்திய வங்கியும், நேபாள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அளித்தால் நிறைய பணத்தை சேமிக்க முடியும் என நேபாள ஆயில் கார்ப்பரேஷன் கருதுகிறது. இந்நிறுவனம் மானிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிப்பது குறித்து நேபாள அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்த பரிந்துரை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை குறித்து அரசும் பரிசீலித்து வருவதாகவும், இனி தான் முடிவு எடுக்கப்படும் என நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!