இனிமே எப்பவும் ரயில் பயணம் தான், பயனர்களுக்கு குட் நியூஸ் – IRCTC அறிவிப்பு!

0
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான், பயனர்களுக்கு குட் நியூஸ் - IRCTC அறிவிப்பு!
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான், பயனர்களுக்கு குட் நியூஸ் - IRCTC அறிவிப்பு!
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான், பயனர்களுக்கு குட் நியூஸ் – IRCTC அறிவிப்பு!

நீங்கள் தொலைதூர பயணத்திற்கு ரயிலில் பயணம் செய்து, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விஷயம் என்னன்னு தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவின் இறுதிவரை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

டிக்கெட் முன்பதிவு விதி:

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்பி பயணிப்பர். குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிப்பார்கள். ஏனெனில் டிக்கெட் கட்டணம் ரயில்களில் தான் குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதற்காகவே மக்கள் அதிகளவு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி இருக்கையில் ரயில் பயணிகளுக்கான, குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தான் இது.

Exams Daily Mobile App Download

ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதியின்படி, டிக்கெட் பதிவு செய்யும் முன் உங்கள் கணக்கை சரி பார்க்க வேண்டும். அதாவது வெரிஃபை செய்ய வேண்டும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நீண்ட காலமாக, அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது.

எனவே, முன்பதிவு செய்யும் முன்பாக மேற்குறிப்பிட்டுள்ள சரிபார்ப்பு செயல்முறையை கையாள வேண்டும். இப்போது அதை எப்படி சரி பார்க்கப்பட வேண்டும் என்பதை படிப்படியாக பார்க்கலாம்.

  • IRCTC செயலி அல்லது இணைய தளத்திற்குச் சென்று சரிபார்ப்பு சாளரத்தில் (வெரிஃபிகேஷன் விண்டோ) கிளிக் செய்யவும்.
  • இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
  • இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெரிஃபை பொத்தானைக் கிளிக் செய்யவும்.

பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

  • அதன் பிறகு உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
  • இதே போல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.
  • இப்போது உங்கள் கணக்கில் இருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.

மேலும், ஐஆர்சிடிசியின் ஒரு யூசர் ஐடியில், அதுவும் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற வரம்பு இப்போது 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆதார் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!