பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே எந்தவித செலவும் இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.

பிறப்பு, இறப்பு சான்றிதல்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயமாக குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். அதாவது, குழந்தை பிறந்து 14 நாள்களுக்குள் கண்டிப்பாக பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்து விட வேண்டும். அதே போல குடும்ப உறுப்பினர் இறந்த 7 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை பிறப்பு, இறப்பு சான்றிதழ் தவறிவிட்டாலும் எளிமையாக ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். அதாவது, மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தின் மூலமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

அதாவது, பொதுமக்கள் பிறப்பு, இறப்பு தேதி குறித்தான அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவிட்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவித செலவும் இல்லாமல் எப்படி ஆன்லைன் வழியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். அதாவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் இருக்கின்றன.

இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – Apprentice பணியிடங்கள்

அதாவது, சென்னையை இருப்பிடமாக கொண்டவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்கிற இணையதள முகவரியின் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பகுதிகளில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்கிற இணையதள முகவரியின் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search) என்கிற பகுதியை கிளிக் செய்து பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், சான்றிதழ் எந்த மொழியில் வேண்டும் என்பதை கிளிக் செய்து Generate என்பதை கிளிக் செய்துவிட்டால் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!