10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.15,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.15,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.15,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.15,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant மற்றும் Office Staff ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,000/- வரை மாத ஊதியம் தரப்படும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (31.07.2022) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Office Assistant, Office Staff ஆகிய பணிகளுக்கு என 04 பணியிடங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
  • Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Staff பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • Office Staff பணிக்கு ரூ.15,000/- என்றும், Office Assistant பணிக்கு ரூ.10,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

AU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (31.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!