விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் சன் டிவி "ரோஜா" சீரியல் வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு, சீரியல்கள் வரும் நேரத்தை விட அதில் நடக்க இருக்கும் எபிசோட்கள் குறித்த ப்ரோமோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு.

சீரியல் ப்ரோமோக்கள்:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர். அந்த சீரியலில் குறிப்பிட்ட ஒரு சில சீரியல்கள் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களாக இருக்கிறது. அந்த சீரியல்களின் எபிசோடுகள் ஒளிபரப்புவதற்கு முன்பாகவே சீரியல் குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி மக்களிடம் எதிர்பார்ப்பை கூடுகிறது. அந்த வரிசையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தனத்தின் அம்மா உன்னுடைய குழந்தையை மட்டும் பார்க்க வேண்டும் என அடிக்கடி சொல்லி வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனம் நல்லவங்கதான் ஆனா அவங்க அம்மா தான் குடும்பத்தில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படி இருந்த குடும்பம் இப்படி சிதறிப்போகிற நிலைமைக்கு வந்துவிட்டதே…. என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சமூகத்தில் நடப்பதை கண்முன் நிறுத்தியுள்ள சீரியல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி மெயின் கதைக்கு வாங்க சார் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டிற்கு செல்ல அங்கே அஞ்சலி இல்லை உடனே கண்ணம்மா தான் இது எல்லாத்துக்கும் காரணமாக இருப்பார் என நினைத்து கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு வெண்பாவை தவிர மத்த எல்லார் மேலையும் சந்தேகம் வரும் என்றும் கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியை பார்ட்டி கொடுத்து அனுப்பி வைத்த சீரியல் குழு – ரசிகர்கள் அதிர்ச்சி!

மற்றொரு ரசிகர் தான் பொண்ணுதானு தெரியமலே இப்படி பண்றீங்களே பாரதி இதெல்லாம் எங்க போய் சொல்ல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீக்கிரமா உண்மையை சொல்லி சீரியலை முடிங்கப்பா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியோ போய்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் இதற்கு முடிவே கிடையாதா என்று கேட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவுக்கு கோபி குங்குமம் வைப்பதை கோபியின் அப்பா பார்த்து விடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி சொந்த குடும்பத்தை விட ராதிகா மேலதான் அதிகமாக அக்கரை காண்பி்க்கிறார் என தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் நாளைக்காவது சரியா மாட்டுவீங்களா கோபி என்று கேட்டுள்ளார். மேலும், ஒரு ரசிகர் அப்போ இது கனவு இல்லையா ரியலா கோபி அவங்க அப்பாகிட்ட மாட்டிக்க போறாரா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீனுக்காக வெயிட் செய்வதாகவே கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா தப்பு செய்ததாக சிவகாமி திட்ட சந்தியா சத்தமாக நான் அப்படி செய்யவில்லை சமையல் போட்டி பற்றி தான் பேசினேன் என சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் சந்தியாவுக்கு தைரியம் வந்துருக்கு என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

மற்றொரு ரசிகர் இந்த அர்ச்சான எதுக்கு நடுல சீன் போட்டுக்கிட்டு இருக்கு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனாவுக்கு செம நோஸ்கட் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவுக்கு எதிராகவும், சந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என்ற உண்மை தெரியாத நிலையில், இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர் ஒருவர், செண்பகம் சீக்கிரமாக ரோஜாவை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நம்ம அர்ஜுன் ரோஜா சின்ன வயசுல பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அனுவின் ஆட்டம் எப்ப ஒரு முடிவுக்கு வருமோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீன் டிரெய்லர் தான் மெயின் பிச்சர் வரதுக்கு இன்னும் வருடம் ஆகும் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!