விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘ராஜா ராணி’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வைஷாலி தணிகா தனது நீண்டநாள் காதலரை கரம் பிடித்துள்ளார். இந்த புதுமண ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை வைஷாலி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சின்னத்திரை சீரியல்கள் குறித்த பேச்சுகளில் அதிகம் இடம் பெற்றிருந்தது விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ தொடர் தான். முற்றிலும் புதிய முகங்களுடன், மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ‘ராஜா ராணி’ சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த சீரியலில் கார்த்திக் என்ற கதாப்பாத்திரத்துக்கு தங்கையாக வினோதினி என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை வைஷாலி தணிகா.

2வது முறை கர்ப்பமாக இருக்கும் ‘ராஜா ராணி’ நடிகை ஆலியா மானசா – கணவர் சஞ்சீவ் பதிவு!

இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நடிகை வைஷாலிக்கு சினிமா பட வாய்ப்பும் வந்தது. இதனால் பாதியிலேயே ‘ராஜா ராணி’ சீரியலை விலகிய அவர் கதகளி, சீம ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து மீண்டுமாக சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை வைஷாலி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி அதில் சிறிது காலம் மட்டுமே பயணித்திருந்தார்.

இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கோகுலத்தில் சீதை’ மற்றும் சன் டிவியின் ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார் இவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வைஷாலி தணிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறி ஒரு கல்யாண ஷாப்பிங் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யாரென்கிற தேடல் ரசிகர்களிடைய எழுந்தது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கண்ணம்மாவாக ஜீ தமிழ் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது நடிகை வைஷாலியின் காதல் திருமணம் கோலாகலமாக நடந்தேறி இருக்கிறது. அதாவது சென்னையில் உள்ள முக்கிய திருமண மண்டபம் ஒன்றின் முதலாளியான சத்ய தேவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை வைஷாலி தற்போது இரு வீட்டாருடைய சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணத்துக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!