2வது முறை கர்ப்பமாக இருக்கும் ‘ராஜா ராணி’ நடிகை ஆலியா மானசா – கணவர் சஞ்சீவ் பதிவு!

0
2வது முறை கர்ப்பமாக இருக்கும் 'ராஜா ராணி' நடிகை ஆலியா மானசா - கணவர் சஞ்சீவ் பதிவு!
2வது முறை கர்ப்பமாக இருக்கும் 'ராஜா ராணி' நடிகை ஆலியா மானசா - கணவர் சஞ்சீவ் பதிவு!
2வது முறை கர்ப்பமாக இருக்கும் ‘ராஜா ராணி’ நடிகை ஆலியா மானசா – கணவர் சஞ்சீவ் பதிவு!

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஆலியா மானசாவிற்கு ஏற்கனவே அய்லா என்ற மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆலியா மானசா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து, அதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆலியா மானசா சஞ்சய் ஜோடி. இவர்களுக்கு அழகான அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர்கள், தொடர்ந்து பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அய்லா பாப்பாவும் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட். தற்போது நடிகை ஆலியா மானசா விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கண்ணம்மாவாக ஜீ தமிழ் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சி!

அவரது கணவர் சஞ்சய் தற்போது சன் டிவியில் புதிய தொடரான கயல் நாடகத்தில் நடிக்க இருக்கிறார். முதல் கர்ப்ப காலத்தின் போது ஆலியா குண்டாக ஆனதை அடுத்து, உடற்பயிற்சிகள் மூலம் தன்னுடைய எடையை குறைத்து மீண்டும் செம ஸ்லிம்மாக சீரியலில் தோன்றினார். அதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. தொடர்ந்து சீரியல்களில் பிசியாக இருக்கும் அவர், தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் இன்ஸ்டா லைவில் தெரிவித்துள்ளார்.

‘நீ பண்ணுனது துரோகம்’ ஸ்ருதியிடம் சண்டை போடும் தாமரைச்செல்வி – ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பது போல காட்டினால் தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியும் என்பதால், சீரியலில் கதை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பம் ஒரு பக்கம் வேலை ஒரு பக்கம் என இரண்டிலும் தன்னுடைய பெஸ்ட் கொடுக்கும் ஆலியா மனசாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!