ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்த தங்கம் – ஹாப்பியான மகளிர்!

0
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்த தங்கம் - ஹாப்பியான மகளிர்!

தங்கத்தின் விலை ஆனது ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 520 குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று அதிகரித்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 520 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 54 ஆயிரத்து 320 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 790க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூபாய் 58,080 க்கும் ஒரு கிராம் ரூபாய் 7260 என்ற விலையிலும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? ஈஸியாக படிக்க வேண்டுமா… அப்போ இத உடனே பண்ணுங்க!!!

தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 89.50 என்று விலையிலும், ஒரு கிலோ ரூபாய் 89 ஆயிரத்து 500 என்று விலையிலும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை குறைவு மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!