ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் தகவல் – முறைகேட்டிற்கு இனி இடமில்லை!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் தகவல் - முறைகேட்டிற்கு இனி இடமில்லை!

அரசுகள் நிர்ணயித்த ரேஷன் பொருள்களின் அளவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்காமல் முறைகேடுகள் நடைபெறுவதாக அதிகமான புகார்கள் வெளிவருகிறது. இதை தவிர்க்கும் வகையில் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அரசின் நடவடிக்கை:

மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் அட்டைகளின் வாயிலாக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மானிய விலையிலும், இலவசமாகவும் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. அவர்களுக்கு நிர்ணயித்த அளவைவிட குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு EWS என்ற மின் எடை அளவு முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்த தங்கம் – ஹாப்பியான மகளிர்!

இந்த EWS சாஃப்ட்வேரில் ரேஷன் அட்டைதாரர்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு அவை எடை இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரலை பதிவு செய்தவுடன் அந்த அட்டைதாரருக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு மின் எடை அளவீடு கருவி மூலம் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட முடியாது என்று அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!