TNUSRB வேலைவாய்ப்பு அறிவிப்பு – 3,552 காலிப்பணியிடங்கள்! தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!

0
TNUSRB வேலைவாய்ப்பு அறிவிப்பு - 3,552 காலிப்பணியிடங்கள்! தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!
TNUSRB வேலைவாய்ப்பு அறிவிப்பு - 3,552 காலிப்பணியிடங்கள்! தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!
TNUSRB வேலைவாய்ப்பு அறிவிப்பு – 3,552 காலிப்பணியிடங்கள்! தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!

தமிழக காவல்துறையில் தற்போது காலியாக இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், இரண்டாம் நிலைக் காவலர் உள்ளிட்ட 3,552 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது போலீஸ் கான்ஸ்டபிள்கள், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு அட்டவணையை இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூடுதல் தகுதியுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வித்தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம்.

Exams Daily Mobile App Download

 

மொத்த காலிப்பணியிடங்கள் – 3,552

இந்த மொத்த காலிப்பணியிடங்களில் 20% பணியிடங்கள், முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதே வேளையில் 26 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கக்கூடாது.
  • அதே போல BC, BC(M), பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதே வேளையில் 26 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கக்கூடாது.

PPF & செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் வட்டி உயர்வு? எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!

  • ஆதிதிராவிடர் (SC) / அருந்ததியர் SC(A)) அல்லது பழங்குடியினர் (ST) மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதே வேளையில் 31 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கக்கூடாது.
  • மேலும், ஆதரவற்ற விதவைகள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதே வேளையில் 37 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு நிலைகள்:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.250ஐ தேர்வுக் கட்டணமாக இணையதள வங்கி, வங்கி கடன் அட்டை, UPI மூலம் செலுத்தலாம்.

விண்ணப்ப முறை:
  • இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும்.
  • மேலும், இந்த விண்ணப்பப்பதிவு குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ள விரும்பினால்   இங்கே கிளிக் செய்யவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!