TNPSC தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது ???

1
TNPSC தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது
TNPSC தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது

TNPSC தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது ???

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டு அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியான பணியாளர்களை தேர்வு செய்யும். இதன் மூலம் அரசு பணி கிடைப்பது என்பது சாத்தியமான ஒன்றாகும்.

ஆனால் தற்போது கடந்த டிசம்பர் மாதம் முதல் TNPSC தேர்வாணையம் மூலமாக நடைபெற்ற எந்த ஒரு தேர்விற்குமான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்ட TNPSC தேர்வாணையம் மே மாதம் முதல் பாதி ஊழியர்களுடன் செயல்பட்டது. தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து பணியாளர்களுடன் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது.

இதனால் டிசம்பர் முதல் நடைபெற்ற உதவி கால்நடை மருத்துவர், தொல்லியல் ஆராய்ச்சியாளர், அலுவலர் உள்ளிட்ட பல தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

TNPSC தேர்வாணையமும் இந்த தேர்வு முடிவுகளை அதி சீக்கிரத்தில் வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளில் உள்ளது. எனவே தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!