தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

0

தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

பண்டைக் காலத்தில் மக்கள் திணை வாழ்க்கை வாழ்ந்தனர். எனவே திணை சார்ந்த ஊர்கள் முதலில் தோன்றின.

1. மலை – மலையூர்
2. காடு – காட்டூர்
3. மருதம் – மருதூர்
4. கடல் – கடலூர்

எனத் திணை சார்ந்து ஊர்ப்பெயர்கள் தோன்றின.

மலை அருகே உள்ள ஊர்கள்

1. திருவண்ணாமலை
2. விராலிமலை
3. வள்ளிமைல
4. ஆனைமலை
5. சிறுமலை

குன்றுகள் அருகில் உள்ள ஊர்கள்

குன்று – குன்னூர் குன்றத்தூர் குன்றக்குடி.

பாறைக்கு அருகில் உள்ள ஊர்கள்

1. சிப்பிப் பாறை
2. வால்பாறை
3. மட்டப்பாறை
4. குட்டப்பாறை
5. பேய்ச்சிப்பாறை

உயரமான நிலப்பகுதி “மலை” எனவும் மலையை விட உயரம் குறைந்த பகுதி “குன்று” எனவும் குன்றை விட குறைந்த உயரம் உடைய மேடான பகுதியை “கரடு” எனவும் கற்பாங்கான மேட்டுப்பகுதிக்கு “பாறை” எனப் பெயரிட்டு வழங்கப்பட்டது.

“கிரி” என்பது மலையைக் குறிக்கும் வடசொல்லாகும். நீலகிரி கோத்தகிரி கிருஷ்ணகிரி போன்றவை அவ்வகையில் எழுந்த ஊர்ப்பெயர்களே.

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். காட்டில் எந்த மரங்கள் பெரும்பான்மையாக காடாக அடர்ந்து வளர்ந்துள்ளதோ அந்த மரத்தின் பெயரால் ஊர் பெயர் தோன்றுகிறது.

1. ஆர் (அத்திமரம்) – ஆர்க்காடு
2. ஆல் – ஆலங்காடு
3. களாம் – களாக்காடு
4. மா – மாங்காடு
5. பனை – பனையபுரம்

ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் கொட்டில்களுக்கு பட்டி என்று பெயர்.

1. ஆட்டயம்பட்டி
2. கோவில்பட்டி
3. சிறுகூடல்பட்டி
4. காளிப்பட்டி

ஆறுகள் பாய்ந்து வளம் நிறைந்த வயல்களும் வயல் சார்ந்த நிலமும் மருதமாகும். இந்நிலக் குடியிருப்புகளுக்கு ஊர் என்று வழங்கப்பட்டது.

ஆறு – ஆற்றூர்
குளம் – பெரிய குளம் தல்லாகுளம் மாங்குளம்
ஏரி – வேப்பேரி சீவலப்பேரி பொன்னேரி
சோலை – புளியஞ்சோலை திருமாலிஞ்சோலை மாஞ்சோலை பூஞ்சோலை.
ஊரணி – பேராலூரணி.

கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும்.
கடல் பட்டினம் பாக்கம் கரை குப்பம் ஆகிய சொற்களைத் தாம் வாழும் ஊருக்கு நெய்தல் நில மக்கள் வழங்கினர்.

கடல் – கடலூர் கடலாடி
பட்டினம் – சென்னைப்பட்டினம் தேவிப்பட்டினம்
கரை – அமைந்தகரை கீழ்க்கரை நீலாங்கரை
குப்பம் – நெல்லிக்குப்பம் பாடிக்குப்பம்.

அரசும் ஊர்களும்

நாட்டை ஆண்ட மன்னர்கள் “கோட்டை” கட்டித் தம் மக்களைக் காத்தனர். இக்கோட்டை அடிப்படையிலும் ஊர்ப் பெயர்கள் தோன்றும்.
கோட்டை – தேவக்கோட்டை நாட்டரசன்கோட்டை புதுக்கோட்டை பட்டுக்கோட்டை.

தமிழ்நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்ட பாளையக்காரர்கள் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தையும் இணைத்து குமாரபாளையம் கோரிப்பாளையம் கோபிசெட்டிபாளையம் மேட்டுப்பாளையம் என வழங்கினர்.

மரூஉ என்ற இலக்கணம் ஊர்ப்பெயர்த் திரிபுகள்

சொற்கள் காலத்தால் மாற்;றம் அடைகின்றன. அம்மாற்றத்தை இலக்கண நூல்கள் “மரூஉ” என்று அழைக்கின்றன. ஊர்ப்பெயர்களும் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.

குறிஞ்சி என்ற சொல் குறிச்சி
மருதை என்ற சொல் மதுரை
கோவன்புத்தூர் என்ற சொல் கோயம்புத்தூர்
தஞ்சாவூர் என்ற சொல் தஞ்சை

ஊரும் திசையும்

கிழக்கு – கீழர் கீழ்க்கட்டளை கிழக்குத்தெரு
மேற்கு – மேலைச்சிவபுரி மேல்கோட்டை மேற்குத்தெரு
வடக்கு – வடபழனி வடபழஞ்சி
தெற்கு – தென்காசி தென்பழஞ்சி.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!