TNPSC பொது தமிழ் – சமயப் பொதுமை

0

சமயப் பொதுமை

இங்கு கொடுக்கப்பட்டுள்ள  சமயப் பொதுமை முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

  1. தாயுமானவர்
  • இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு
  • பெற்றோர் கேடிலியப்பர் பிள்ளை – கெசவல்லி அம்மையார்
  • இவர் திருச்சிவ விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கணக்கராக (கருவூல அலுவலராகப்) பணிபுரிந்தார்.
  • இவர் மனைவி மட்டுவார் குழலி
  • இவரது மகன் கனக சபாபதி
  • இவரது மனைவி இறந்தவுடன், தனது மகனை தனது தமையனார் சிவசிதம்பரமிடம் வளர்க்கும் படி பொறுப்பை ஒப்படைத்தார்.
  • திருச்சி மௌன குருவிடம் உபதேசம் பெற்றார்.
  • தனது குரு திருமூலர் மரபில் வந்தவராக கூறுகின்றனர்.
  • அதை ஒட்டியே தம் பாடல்களில் “மூலன் மரபில் வரு மௌன குருவே” என்று போற்றி இருப்பது தெரிய வருகிறது.
  • தாயுமானவர் தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் நிபுணராக விளங்கினார்.
  • இவரது காலம் 1706 – 1744
  • இவர் பாடல்களுக்கு “தாயுமானவ சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று பெயர்.
  • இதில் 5 உட்பிரிவு, 1452 பாடல்கள் உள்ளன.
  • இவர் பாடிய நாட்டுப் பாடல் வடிவம் கண்ணி அவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக்கண்ணி, ஆனந்தக் களிப்பு, ஆகார புவனம் போன்றவை இவர் பாடல் தலைப்புகள் சிலவாகும்.
  • இவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக் கண்ணி புகழ் போன்றவை.
  • இவர் சைவ சித்தாந்தம், அத்வைதம் இரண்டிற்கும் சமரசம் செய்ய முயன்றார்.
  • இவரது எளிய பாடல்கள் உள்ள இயல்பை உணர்ந்த இஸ்லாமியர் ஆன குணங்குடி மஸ்தான் சாகிபு தனது பாடல்களில் இதனைப் பின்பற்றினார்.

மேற்கோள்

  • “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”
  • “நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய்ப் பராபரமே”
  • “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும்”
  • “சும்மா இருப்பதே சுகம்”
  • “பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்”
  • “அன்பைப் பெருக்கி எனது ஆயுயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே”

2.இராமலிங்க அடிகள்:

  • இவர் பிறந்த ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள “மருதூர்”
  • இவரது பெற்றோர் இராமையாப் பிள்ளை – சின்னம்மாள்.
  • இவரது காலம்10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.
  • இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு “திருவருட்பா” என்று அழைக்கப்படுகிறது.
  • இது ஆறு திருமுறைகளாக பகுக்;கப்பட்டு உள்ளது.
  • திருவருட்பா திரு + அருட்பா என்று பிரிக்கலாம். இதற்கு தெய்வீக அருளால் பாடப் பெற்ற பாக்கள்” என்பது பொருள்.
  • திருவருட்பா முதலில் இராமலிங்க அடிகளின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறையாக வெளியிடப்பட்டது.
  • பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளிப்பட்டன.
  • முன்னாள் தமிழக அறநிலையத் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியனவற்றை தனிநூலாகத் தொகுத்து வெளியிட்டார்.
  • பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
  • இராமலிங்கரின் உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆவார்.
  • இராமலிங்கர் பெற்றோருக்கு ஐந்தாவது மகன் ஆவர்.
  • இராமலிங்கர் தனது உடன்பிறந்த உண்ணாமுலை மகள் தனக்கோடியை தனது இருபத்தேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இராமலிங்க அடிகள் கொள்கை

  • கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
  • புலால் உணவு உண்ணக் கூடாது.
  • எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
  • சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
  • இறந்தவர்களை எரிக்க கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்.
  • எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
  • பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
  • சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
  • எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே அவற்றை துன்புறுத்தக் கூடாது.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

  • நல்லோர் மனதை நடுங்க செய்யாதே
  • தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
  • மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  • ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  • பொருளை இச்சித்து பொய் சொல்லாதே
  • பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  • இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே
  • குருவை வணங்க கூசி நிற்காதே
  • வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  • தந்தை, தாய் மொழியை தள்ளி நடக்காதே.

வள்ளலார் பதிப்பித்தவை

  • சின்மய தீபிகை
  • ஒழி விலொடுக்கம்
  • தொண்டமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

  • மனுமுறை கண்ட வாசகம்
  • ஜீவ காருண்யா ஒழுக்கம்

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

  • சிறந்த சொற்பொழிவாளர்
  • போதகாசிரியர்
  • உரையாசிரியர்
  • சித்த மருத்துவர்
  • பசிப்பிணி போக்கிய அருளாளர்
  • பதிப்பாசிரியர்
  • நூலாசிரியர்
  • இதழாசிரியர்
  • இறையன்பர்
  • ஞானாசிரியர்
  • அருளாசிரியர்
  • சமூக சீர்திருத்தவாதி
  • தீர்க்கதரிசி
  • மொழி ஆய்வாளர் (தமிழ்)
  • இவர் “சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
  • பிற்காலத்தில் அந்த பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.
  • இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ள யாப்பு வடிவங்கள்: கண்ணி, கும்மி, கீர்த்தனை.
  • நிறுவிய நிறுவனங்கள்: சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்தி வளாகம்.
  • இவர் தமது கொள்கைக்கெனத் தனிக்கொடி கண்டவர் அது மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது.
  • இராமலிங்கம் “வடிவுடை மாணிக்க மாலை” என்னும் நூலையும் திருவொற்றியூர் சிவபெருமான் மீது “எழுத்தறியும் பொரும் மாலை” என்னும் நூலையும் பாடியுள்ளார்.
  • “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல்” என்றார் வள்ளலார்.
  • பாரதியார் வள்ளலாரைப் “புது நெறி கண்ட புலவர்” என்று போற்றினார்.
  • வள்ளலாரின் ஞானகுரு சம்பந்தர் ஆவார்.
  • வள்ளலார் இளமையில் வழிபட்ட கடவுள் முருகன்.
  • வள்ளலார் முதலில் முருக பக்தர், இடையில் சிவ பக்தர், நடுவில் ஆடலரசு அன்பர், முடிவில் அருட்பெருஞ்சோதி அடியார்.
  • “அருட்பெருஞ்சோதி”, “தனிப்பெருங்கருணை” வள்ளலாரின் தாரக மந்திரம் ஆகும்.
  • வள்ளலாரின் கோட்பாடு: ஆன்ம நேய ஓருமைப்பாடு.
  • வள்ளலாரின் கொள்கை: ஜீவ காருண்யம்
  • பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள். வள்ளலாரின் பாடல்களைத் திருமுறைகள் என்றழைக்கக்கூடாது.
  • அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்று இலங்கை ஆறுமுக நாவலர் கூறினார்.
  • மருட்பா பொருள் மயக்கத்தை தரும் பாடல்
  • இராமலிங்க அடிகள் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரியர் விருத்தம் பாடினார். 192 சீர் ஆசிரிய விருத்தம்.
  • தமிழ் இலக்கியத்துள்ளே அடி எண்ணிக்கையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர் 1596 அடிகள் கொண்ட ஆசிரியம்.
  • தொல்காப்பியர் ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.

மேற்க்கோள்

  • “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை”
  • “அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
  • “மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே”
  • “ஒத்தாரும் தாழ்ந்தாரும் உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”
  • “அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாதார்
  • பாட்டெல்லாம் மருட்பாட்டு”
  • “உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
  • “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
  • “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”
  • “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை”
  • “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்”
  • “கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக”

3. திரு.வி.கல்யாண சுந்தரனார்

  • திருவாரூர் விருத்தாசலனார் மகன் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே – திரு.வி.க
  • இவரது பெற்றோர் விருத்தாசலனார் – சின்னம்மையார்
  • திரு.வி.க செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரது காலம்08.1883 முதல் 17.09.1953 வரை
  • இவர் பெற்ற பட்டம் தமிழ்த் தென்றல்
  • இவர் “தொழிலாளர் நலனுக்கும்”, “பெண்கள் முன்னேற்றத்திற்கும்” அயராது பாடுபட்டார்.
  • “தமிழ் மேடைப் பேச்சின் தந்தை” என அழைக்கப்படும் திரு.வி.க மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
  • திரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்புடையதாகிறது.
  • 1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிப்புரிந்தார். அவருக்கு திருமணம் நடந்தது.
  • அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்
  • 1918 ம் ஆண்டிற்குள் தம் மனைவி, மகள், பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியாக வாழ்ந்தார்.
  • இவரது ஆசிரியர் கதிர் வேற்பிள்ளை.
  • நடத்திய இதழ் நவசக்தி
  • ஆசிரியராக இருந்த இதழ் தேசபக்தன்
  • திரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கும் சிறந்த எழுத்து நடை கொண்டவர்.
  • திரு.வி.க நூற்றாண்டு விழாவினை தழிழ்நாடு அரசு 1984ம் ஆண்டு தஞ்சையில் கொண்டாடியது.
  • கல்கியும், வரதராசனாரும் திரு.வி.கவின் மாணவர்கள்.

எழுதிய நூல்கள்

  • யாழ்பாணம் தந்த சிவஞான தீபம்
  • கதிரை வேற் பிள்ளை – 1908
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
  • பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை – 1927
  • நாயன்மார் வரலாறு – 1937
  • முடியா? காதலா? சீர்திருத்தமா – 1938
  • வள்ளொளிலி – 1942
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
  • உரைநூல்கள்
  • பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
  • பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரை – 1923
  • காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1947
  • திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
  • திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) – 1941

அரசியல் நூல்கள்

  • தேச பக்தாமிர்தம் – 1919
  • என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
  • தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
  • தமிழ்த் தென்றல் (அ) தலைமைப் பொழிவு – 1928
  • சீர்திருத்தம்
  • தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
  • தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
  • இந்தியாவும் விடுதலையும் – 1940
  • தமிழ்க்கலை – 1953
  • சமய நூல்கள்
  • சைவ சமய சாரம் – 1921
  • நாயன் மார் திறம் – 1922
  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
  • சைவத்தின் சமரசம் – 1925
  • முருகன் (அ) அழகு – 1925
  • கடவுட் காட்சியும் தாயுமானவர் – 1929
  • தமிழ்நூல்களில் பௌத்தம் – 1929
  • சைவத் திறவு – 1929
  • நினைப்பவர் மனம் – 1930
  • இமய மலை (அ) தியானம் – 1931
  • சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
  • சமரச தீபம் – 1934
  • சித்த மார்க்கம் – 1935
  • ஆலமும் அமுதமும் – 1944
  • பரம் பொருள் (அ) வாழ்க்கை வழி – 1949

பாடல்கள்:

  • முருகன் அருள் வேட்டல் – 1932
  • திருமால் அருள் வேட்டல் – 1938
  • பொதுமை வேட்டல் – 1942
  • கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
  • புதுமை வேட்டல் – 1945
  • சிவனருள் வேட்டல்                – 1947
  • கிறிஸ்து மொழிக்குறள் – 1948
  • இருளில் ஒளி – 1950
  • இருமையும் ஒருமையும் – 1950
  • அருகன் அருகே (அ) விடுதலை வழி – 1951
  • பொருளும் அருளும் (அ) மார்க்ஸியமும் காந்தியும் – 1951
  • சித்தந்திருத்தம் (அ) செத்துப்பிறத்தல் – 1951
  • முதுமை ஊறல் – 1951
  • வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல் – 1953
  • இன்ப வாழ்வு – 1925

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!