தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்? நிதியமைச்சரின் விளக்கம்!

0
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்? நிதியமைச்சரின் விளக்கம்!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்? நிதியமைச்சரின் விளக்கம்!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்? நிதியமைச்சரின் விளக்கம்!

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதில் குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார். அத்துடன் இது காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதில் புதிய திட்டங்கள், துறைகளுக்கு நிதி ஒதுக்குவது, மின் கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிடுவது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதனை தொடர்ந்து திமுக வாக்குறுதி அளித்ததில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இதில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, தமிழகத்தில் மகளிருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஆவின் பால் விலைக்குறைப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் மகளிருக்காக மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த திட்டத்தை போதுமான நிதி இல்லாததால் இந்த ஆண்டு செயல்படுத்த முடியவில்லை. அத்துடன் தற்போது இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களை கண்டறிவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக சாதாரண மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் நிதி நிலை சீராக இருக்கும் போது செயல்படுத்தப்படும். அத்துடன் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிர மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here