TN TRB PG பணி நியமனம் தாமதம்? தேர்வர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் இறுதியில் நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பணி நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வர்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பணி நியமனம்:
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வானது கணினி வழியாக டிசம்பர் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 2,148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். தற்போது பணிநியமனத்திற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனங்களும் நடந்து வருகிறது.
சிலர் இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் பணி நியமனத்தில் குழப்பங்கள் நிலவி வருகிறது. கடந்த வாரம் 3237 காலியிடங்களை கொண்ட அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியல் வெளியானது. அதில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியில் அமர உள்ள தேர்வர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த 2 தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 2 பணிகளிலும் பணி புரிவது என்பது சாத்தியமற்றது. மேலும் ஒரு பணிக்கு மட்டும் தேர்தெடுக்கப்பட்டால் மற்றொரு பணி வாய்ப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும்.
கிள்ளி கொடுக்காம இப்படி அள்ளி கொடுக்குறாங்களே.. ஐ.டி ஊழியர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நேரத்தில் காலிப்பணியிடம் நிரப்படாமல் இருந்தால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும். அதனால் தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை பல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டாம். சற்று தாமதமாக பணி நியமனங்களை மேற்கொள்ள தேர்வர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்