TNUSRB PC 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு | PC Marksheet Download!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் TNUSRB PC தேர்வு கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்போது மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இதற்காக தேர்வு நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு மூலமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அறிவித்தபடி இத்தேர்வு நவம்பர் 27ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 500 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள். இத்தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!
Exams Daily Mobile App Download
இத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து ஆவண சரிபார்ப்புக்கு பின், இறுதித் தகுதிப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.