தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் மாநில வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே 21 அன்று போட்டித் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதத்தின் மத்தியில் வெளியாகும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் சில துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளது.

10வது படித்தவர்களுக்கு Post Office இல் வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்!

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc Agri with MBA முடித்திருக்க வேண்டும். பணியில் குறைந்தது 5 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தரவு உள்ளீடு இயக்குனர் பணியில் 5 காலியிடங்கள் உள்ளது B.Sc Computer Science or BCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022 க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!