தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டு பறிமுதல் – அரசுக்கு வேண்டுகோள்!

0
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டு பறிமுதல் - அரசுக்கு வேண்டுகோள்!
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டு பறிமுதல் - அரசுக்கு வேண்டுகோள்!
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டு பறிமுதல் – அரசுக்கு வேண்டுகோள்!

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளின் நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வசிக்கும் நபர்களின் ரேஷன் அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை பறிமுதல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்ததன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட சில வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதே போல தென் மாவட்டங்களாக கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் ஏகப்பட்ட பாதிப்புகள் உருவாகி இருக்கிறது. இது தவிர கனமழை காலங்களில் தண்ணீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கியது.

தமிழக அரசு நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.13 கடைசி நாள்!

குறிப்பாக சென்னை போன்ற சில முக்கிய நகரங்களில் உள்ள நீர் நிலைகளில், குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமித்துள்ளதால் தான் மழைவெள்ளம் வடிவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் இருந்து ரேஷன் அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் சுமார் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 பாசன ஏரிகளில் 4,266 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 698 ஏரிகள் 91-99% வரை நிரம்பி உள்ளன. தவிர 843 ஏரிகளில் 81 – 90% வரை தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து 2,756 ஏரிகளில் 1- 25%மும், 438 ஏரிகளில் தண்ணீரே இல்லாத நிலையும் உள்ளது.

சென்னையில், பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வரத்து இருக்கிறது. அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2 ,24,297 மில்லியன் கன அடியாகும். இப்போது இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக 1,64,636 மில்லியன் கன அடி அளவு நீர் நிறைந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த தகவல் மக்களுக்கு நிம்மதியை அளித்திருந்தாலும், சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு இடங்களில் மழை வெள்ளம் ஆக்கிரமித்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் வில்லங்க சான்று விபரங்களை திருத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – புதிய வசதி அறிமுகம்!

இதற்கு நீர் செல்லும் வழித்தடங்களின் ஆக்ரமிப்பு மட்டுமே காரணமாகும். இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு காண நீர்நிலை ஆக்கிரத்துள்ள வீடுகளின் மின் மற்றும் குடிநீர் இணைப்பை அரசு துண்டிக்க வேண்டும். அவர்களின் ரேஷன் அட்டைகளையும் அரசு திரும்ப பெற வேண்டும். இந்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் விளம்பர பலகை வைத்து இது போல பின்னாட்களில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!