ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – இதற்காக தான்? மாநில அரசு முடிவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜூன் 15 முதற்கொண்டு மாணவர்களின் வருகை இருக்கும் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் வரும் ஜூன் 13ம் தேதியன்று பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில், ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மட்டுமே வருகை தந்தால் போதும் என்றும், மாணவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது ஜூன் 15 அன்று பள்ளிக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தொடங்கும் முன்பே, ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனா புதிய பாதிப்புகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு, நோய்த்தடுப்பு நெறிமுறைகளை மேற்கொள்வதற்காக முதலில் ஊழியர்களை பள்ளிக்கு அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கொரோனா பரவல் எதிரொலி!
அந்த வகையில் பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துதல், வெப்பநிலை பரிசோதனைகள், முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு மாநில கல்வி ஆணையர் சூரஜ் மாந்தரே பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இம்மாநிலத்தில் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகளும் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் உள்ள பள்ளிகள் ஜூன் 27 முதல் மீண்டும் திறக்கப்படவிருந்தன. இருப்பினும், மாணவர்கள் ஜூன் 27ம் தேதிக்கு முன் பள்ளிக்கு வரும்போது, ஊழியர்கள் அனைவரும் ஜூன் 24 முதல் வேலைக்கு வந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.