தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கொரோனா பரவல் எதிரொலி!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளுக்கு மத்தியில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பில் எந்தவொரு மாற்றங்களும் அறிவிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓய்ந்த கொரோனா 3ல் அலைப்பரவலை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வகையான நடவடிக்கைகளும் வழக்கம் போல மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டுமாக தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் கணிசமாக உயர்வடைய துவங்கியுள்ளது. இது கொரோனா 4ம் அலைப் பரவலுக்கான ஆரம்பம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா புதிய பாதிப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூன் 13ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் கொரோனா புதிய பாதிப்புகளை தடுக்கும் விதமாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். அதாவது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் கொரோனா 3ம் அலைக்கு பிறகு மக்கள் இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென அதிகரிக்கும் புதிய பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தொற்றின் வேகம் கூடுதலாக இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தமிழக மக்கள் அனைவரும் குறிப்பாக பொது நிகழ்ச்சிகளின் போது முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 42,87,346 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்படவில்லை. அதே போல 2 கோடி பேர் இன்னும் 2வது தவனை தடுப்பூசி போடவில்லை. இந்த நிலையில் வரும் ஜூன் 12ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – TTDC முக்கிய அறிவிப்பு!

அதே போல பள்ளி மாணவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும். அந்த வகையில் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் போது 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். இப்போது வரை புதிய பாதிப்புகள் 1000 என்ற அளவில் இருப்பதால் பள்ளிகளை திறப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. இருப்பினும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!