கோவில்களில் திருமணம் நடத்த இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!

0
கோவில்களில் திருமணம் நடத்த இனி இந்த சான்றிதழ் கட்டாயம் - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!
கோவில்களில் திருமணம் நடத்த இனி இந்த சான்றிதழ் கட்டாயம் - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!
கோவில்களில் திருமணம் நடத்த இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!

கோயில்களில் திருமணம் நடத்துவதற்கு என்று புதிய விதிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

இந்துசமய அறநிலையத்துறை:

இந்து சமய கோயில்களின் நிர்வாகத்தை பராமரிக்கவும், பாதுகாப்பதற்கும் அமைக்கப்பட்ட துறை இந்து சமய அறநிலையத்துறை. மேலும் இந்து சமய திருக்கோவில்களுக்கு சொந்தமான மனைகள், மற்றும் கட்டிடங்களுக்கு நியாமான வரிகளை நிர்ணயம் செய்ய இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை பாதுகாத்தல்,கோயில் பராமரிப்பு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலைய துறையின் கடமை ஆகும். மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 2003ம் ஆண்டு முதல் வருடந்தோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நல் வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்கள், மற்றும் கட்டிடங்களை குத்தகைக்கு விடுதல்,போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு இ -சேவை மையம் மூலம் திருமணம் ஆகாதவர் என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருமணங்களை நடத்த இதுவரை இதர சான்றிதழ்களுடன் ‘முதல் திருமண சான்றும்’ கோரப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல் திருமண சான்றுக்கு பதிலாக இ-சேவை மையங்களில் வழங்கப்படும் திருமணம் ஆகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இனி திருக்கோவில்களில் திருமணம் நடத்த விரும்பும் பொதுமக்கள் இ-சேவை மையங்களில் வழங்கும் திருமணம் ஆகாதவர் என்ற சான்றிதழை பெற்று சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து திருக்கோயில் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திருக்கோவில்களில் திருமணம் நடத்திட அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத சான்றிதழை கோரினால் அறநிலையத்துறையின் தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) எண்ணினை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!