மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி! ராஜஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!

0
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் - வன்முறை எதிரொலி! ராஜஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் - வன்முறை எதிரொலி! ராஜஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி! ராஜஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!

இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் உருவானது. குறிப்பாக, நுபுர் சர்மாவின் கருத்துக்கள் உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகளை உருவாக்க கத்தார், ஈரான், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்திய அரசுக்கு விரோதமாக கண்டனங்கள் எழும்பியது. இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களை வெளியிட்ட பதிவு காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு இப்போது ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியில் வசித்து வரும் கன்னையா லால் என்ற டெய்லர் ஒருவர் நுபுர் சர்மாவை ஆதரித்து சில பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 28) மதியம் அவரது கடைக்கு வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் செல்போனில் படம் பிடிக்க மற்றொருவர் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுக்கும் படி கேட்டுள்ளார்.

அப்போது, அந்த டெய்லர் அளவு எடுக்க ஆரம்பிக்கும் போது அந்த வாலிபன் ஒரு வாளை எடுத்து அவரது கழுத்தை அறுக்க அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பிறகு, இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ள காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரியாஸ் அக்தர், கோஸ் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இப்போது இந்த கொலை சம்பவம் காரணமாக அம்மாநிலத்தில் மோதல் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று கருதிய போலீசார் அம்மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

மேலும், அம்மாநிலத்தில் தற்போது இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது இந்த வன்முறையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here