எழிலிடம் கேள்வி கேட்ட ஈஸ்வரி, சொல்ல முடியாமல் தவித்த தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழிலிடம் கேள்வி கேட்ட ஈஸ்வரி, சொல்ல முடியாமல் தவித்த தாத்தா - இன்றைய
எழிலிடம் கேள்வி கேட்ட ஈஸ்வரி, சொல்ல முடியாமல் தவித்த தாத்தா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
எழிலிடம் கேள்வி கேட்ட ஈஸ்வரி, சொல்ல முடியாமல் தவித்த தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் கெஞ்சி கேட்க ஆனால் ராதிகா நான் மும்பை செல்ல போகிறேன் என பிடிவாதமாக சொல்கிறார். கோபியிடம் சண்டை போடுவதை பார்த்த மயூரா கோவப்பட்டு ராதிகாவிடம் பேச அதை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார். பின் ஈஸ்வரி எழிலிடம் அவன் வந்து பேசியதற்கு விளக்கம் கேட்க ஆனால் எழில் பதில் சொல்லாமல் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகாவிடம் கெஞ்ச உடனே ராதிகா கோபியை நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு உங்களுக்கு பயந்து தான் நான் மும்பை செல்ல இருக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபி இப்போது அங்கே போக வேண்டிய அவசியம் என்ன எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் இப்போது ஏன் இப்படி செய்கிறாய் என கேட்கிறார். அதற்கு ராதிகா என்னுடைய பிரச்சனை என்னால் சரி செய்து கொள்ள முடியும் முதலில் வெளியே போங்க என சொல்லி வெளியே அனுப்புகிறார்.

அப்போது மயூரா வந்து பார்த்துவிட கோபி கெஞ்சுவதை பார்த்து வருத்தப்படுகிறார். ராதிகாவிடம் பாவம் அவரை இப்படி எல்லாம் செய்வதை பார்த்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். மயூரா அழுது கொண்டே சென்று ரூமிற்குள் கதவை அடைத்து கொள்கிறார். அப்போது ராதிகா, ராதிகாவின் அம்மா அண்ணன் எல்லாரும் பயந்து போய் கதவை தட்ட மயூரா அழுது கொண்டே வருகிறார். பின் கோபி அங்கிள் பாவம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மயூராவின் நிலைமையை பார்த்து ராதிகாவின் அம்மா சத்தம் போடுகிறார். இப்படி செய்தால் நான் மயூராவை கொண்டு போய் அவளுடைய அப்பாவிடம் விட்டு விடுவோம் என சொல்ல ராதிகாவின் அண்ணனும் அதை தான் சொல்கிறார். அந்த ராஜேஷ் எதற்கு என் மகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்க நீ சரியாக பார்த்துக் கொள்ளவில்லை அப்பறம் என்ன என கேட்கிறார். அவர் பேசியதை பார்த்து ராதிகா வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி தாத்தாவிடம் அவன் எதற்கு அடிக்கடி வந்து கோபியை பற்றி பேசுகிறான் என கேட்க தாத்தா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அப்போது எழில் வர இனியா அவர் சென்றுவிட்டாரா என கேட்கிறார். இனிமேல் வரமாட்டாரே என சொல்ல ஆமாம் என எழில் சொல்கிறார். ஈஸ்வரி எழிலிடம் கேள்வி கேட்க எழில் தாத்தாவை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவரை ஏன் பார்க்கிறாய் எனக்கு உண்மையை சொல் என கேட்க அப்போது எழில் தாத்தாவை அழைத்து கொண்டு ரூமிற்குள் செல்கிறார்.

முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

தாத்தாவின் இந்த நிலைமை தான் வீட்டிற்கு வர கூடாது என நினைத்தோம் ஆனால் இப்போது வந்துவிட்டது பாட்டி எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் ஆனால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை என சொல்கிறார். அந்த ராதிகா தான் மும்பை போகிறாளே என சொல்ல, அப்போது எழில் அம்மாவின் தோழி ராதிகா தான் எனக்கு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா என கேட்க இப்போ எப்படி நிலைமையை சரி செய்வது என கேட்கிறார். பின் ராதிகா மும்பை செல்ல இருப்பதாக சொல்ல அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டே கோபி வருகிறார். கோபியால் ராதிகா பேசியதை எல்லாம் தாங்க முடியாமல் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!