முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

0
முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா - இன்றைய எபிசோட்!
முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா - இன்றைய எபிசோட்!
முல்லையை அழைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்த கதிர், வீட்டை கவனித்த மீனா ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவும் ஐஸ்வர்யாவும் தனம் இல்லாமலே வீட்டு வேலைகளை எல்லாம் பொறுப்புடன் பார்த்து வைக்கிறார்கள். பின் கதிர் முல்லை வீட்டை விட்டு கிளம்பி தனியாக செல்ல இருப்பதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா அடுப்படி வேலைகளை எல்லாம் செய்து வைக்க பின் ஐஸ்வர்யா வந்து பார்த்துவிட்டு என்ன எல்லாம் பொறுப்பாக செய்கிறீர்கள் என கேட்கிறார். தனம் அக்கா வந்து பார்க்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என மீனா சொல்ல ஆனாலும் வந்து பார்த்துவிட்டு சுத்தமாக இல்லை என சொல்வார் பாரு என சொல்கிறார். தனம் வந்து பார்த்துவிட்டு நன்றாக வீட்டை வைத்திருப்பதாக சொல்கிறார். நான் மூன்று நாட்கள் இல்லாமல் வேலை அதிகமாக இருக்குமே என கேட்க அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா மீனாவை குறை சொல்ல இருந்தாலும் நீங்களும் நன்றாக வீட்டை பார்த்து கொள்வீர்கள் என சொல்கிறார். பின் கண்ணன் வர கதிர் உண்மையாகவே மருத்துவமனைக்கு வந்தனா என தனம் கேட்கிறார். ஆமாம் என சொல்ல அவன் எங்கே தங்கி இருக்கிறான் என தனம் கேட்கிறார். முல்லை வீட்டில் என சொல்ல மீனா முல்லை அம்மா எவ்வளவு பேசினார்கள் ஆனால் அவருடைய வீட்டில் தங்கி இருக்கிறார் என சொல்கிறார். தனம் அங்கிருந்து கிளம்ப ஐஸ்வர்யாவிடம் நீங்க வெளியே சென்ற போது எப்படி கோவமாக இருந்தார்கள் ஆனால் கதிர் மீது மட்டும் பாசத்தை பார்த்தியா என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா இப்போ ஏன் அரசியல் செய்கிறீர்கள் என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் முல்லை வீட்டில் அனைவரும் கதிர் வர காத்திருக்கின்றனர். முல்லையின் அம்மா இன்னும் வரவில்லையா என கேட்க வந்து கொண்டு இருப்பதாக சொல்கிறார். முல்லை அம்மா அவர் எங்கே தான் போனார் என கேட்க வந்துவிடுவார்கள் என சொல்கிறார். பின் மூர்த்தி மாப்பிள்ளை சென்றுவிட்டாரா என கேட்க மூர்த்தியை பார்க்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் முல்லை அம்மா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். அப்போது கதிர் வருகிறார்

கதிர் தயக்கத்துடன் நிற்க முல்லை உள்ளே வர சொல்கிறார். முல்லை அம்மா இதுவும் உங்க வீடு தான் தயங்காமல் இருங்கள் என சொல்ல சாப்பிட சொல்கிறார்கள் ஆனால் கதிர் சாப்பிட்டுவிட்டு வந்ததாக சொல்கிறார். பின் நாளைக்கு நாங்க கிளம்புகிறோம் என சொல்ல எங்கே உங்க வீட்டிற்கா என கேட்கிறார். இல்லை என சொல்ல அப்போ எங்கே வீடு எல்லாம் பார்த்தாச்சா என கேட்க பார்த்துவிட்டேன் என சொல்கிறார். என் மகளை கஷ்டப்படுத்த போறீங்களா என சொல்ல முல்லை அவங்க எங்கே கூப்பிட்டாலும் நான் போவேன் என சொல்கிறார்.

அட்வான்ஸ் எல்லாம் அதிகம் தேவைப்படுமே என முல்லையின் அம்மா சொல்ல அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கதிர் சொல்கிறார். இப்போ என்ன அவசரம் என முல்லை அம்மா கேட்க நீங்க தனம் அண்ணியை பேசியது ரொம்ப தவறு அது உங்களுக்கு தெரியும் ஆனாலும் பேசுனீங்க அதையும் மீறி நான் வேறு வழியில்லாமல் இங்கே வந்தேன். இப்போதும் நான் இங்கே இருந்தால் சரியாக வராது என சொல்கிறார். பின் கண்ணனிடம் ஜீவா ரிசல்ட் எப்போது வரும் என கேட்க கண்ணன் பார்த்து சொல்கிறார். பின் அனைவரும் கண்ணனை கிண்டல் செய்கின்றனர்.

ரோஹித் மீது சந்தேகத்தை வெண்பாவிடம் சொன்ன சாந்தி, அம்மாவை கண்டுபிடிக்க போகும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மூர்த்திக்கு மாத்திரை கொடுத்துவிட கண்ணன் கதிர் அண்ணா ரூமில் தங்கி கொள்ளுங்கள் என சொல்ல மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். கதிர் அண்ணன் இப்போது வரமாட்டார் அவங்க சவால் விட்டு சென்று இருக்கிறார்.அதனால் வர வாய்ப்பே இல்லை என சொல்லிவிட்டு மூர்த்தியை சிரிக்க வைக்க சில காமெடிகளை கண்ணன் சொல்கிறார். மூர்த்தியால் சிரிக்க முடியாமல் இருக்க பின் அனைவரும் படுக்க சொல்கிறார். தம்பிகள் உங்களை தூங்கவைத்துவிட்டு போறாங்க என சொல்ல கதிர் இல்லாத குறை இல்லை என மூர்த்தி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!