X தளத்திற்கு தற்காலிகமாக தடை உத்தரவு – காரணம் தெரியுமா? முழு விவரங்களுடன்!

0
X தளத்திற்கு தற்காலிகமாக தடை உத்தரவு - காரணம் தெரியுமா? முழு விவரங்களுடன்!

பாகிஸ்தானில் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்த தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தடை:

சமூக வலைத்தளம் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் Youtube, Instagram, Facebook மற்றும் X தளம் போன்றவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கியது அனைவரும் அறிந்ததே.

TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஜாக்பாட் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

சமீபத்தில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், அது தொடர்பாக அரசு வழங்கிய எக்ஸ் கணக்குகளை முடக்குவது மற்றும் தளத்தில் இருந்து அகற்றுவது குறித்து எக்ஸ் தளத்துடன் முரண்பாடு ஏற்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்த தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதால் பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!