TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி & விண்ணப்ப பதிவு விபரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி & விண்ணப்ப பதிவு விபரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி & விண்ணப்ப பதிவு விபரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி & விண்ணப்ப பதிவு விபரங்கள் இதோ!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (TCS) வேலை தேடுபவர்களுக்கு என்று தற்போது சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியில் சேர எம்.எஸ்சி., எம்.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இது குறித்த முழு விண்ணப்ப பதிவு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிற தொழில் துறைகள் வீழ்ச்சி அடைந்த நிலையில், IT நிறுவனங்கள் அபார வளர்ச்சி அடைந்தன. TCS, Wipro, Infosys உள்ளிட்ட பிரபல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்ததால் செலவுகளும் குறைந்தன. இதனால் ஊழியர்களும் தங்களது குடும்பத்துடன் அதிகளவு நேரத்தை செலவிட நேர்ந்ததால் WFH முறை மிகவும் பிரபலமடைந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊழியர்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு மீண்டும் வரத் துவங்கி உள்ளனர். முன்னணி நிறுவனங்களும் புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – திருமணமானவராக இருந்தால் இந்த அப்டேட் கட்டாயம்!

அதன்படி TCS நிறுவனம் எம்.எஸ்சி., எம்.ஏ., தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்காக டிசிஎஸ் பல திட்டங்கள் மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்கள் மூலம் டிசிஎஸ் அதிக அளவில் புதிய நபர்களை பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டிசிஎஸ் அட்லஸ் பணியமர்த்தலில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர் மாணவர்கள் ஏப்ரல் 20, 2022க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்திருந்தது. மேலும் இப்பணிக்காக தேர்வு மற்றும் நேர்காணல் தேதியை TCS விரைவில் அறிவிக்கும். M.Sc (கணிதம் / புள்ளியியல் / பொருளாதாரம்) & MA (பொருளாதாரம்) தேர்ச்சி பெற்ற ஆண்டு (கடந்த ஆண்டுகள்) – 2020, 2021 & 2022 கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தங்களது விபரங்களை பதிவு செய்யலாம். நீங்கள் புதிதாக பதிவு செய்திருந்தால் https://nextstep.tcs.com/campus/#/இந்த இணைய பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். புதிய பதிவு செய்யும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் சான்றிதழ்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!