TCS, Infosys & Wipro நிறுவனத்தில் 2.33 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – கடந்த நிதியாண்டில் சாதனை!

0
TCS, Infosys & Wipro நிறுவனத்தில் 2.33 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு - கடந்த நிதியாண்டில் சாதனை!
TCS, Infosys & Wipro நிறுவனத்தில் 2.33 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு - கடந்த நிதியாண்டில் சாதனை!
TCS, Infosys & Wipro நிறுவனத்தில் 2.33 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – கடந்த நிதியாண்டில் சாதனை!

சமீபத்தில் முடிவுக்கு வந்த 2022ம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 2.33 லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

கடந்த ஒரு வருடமாக, இந்தியா உட்பட உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறையானது (IT) கடுமையான அட்ரிஷன் விகிதங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் IT நிறுவனங்களை விட்டு வெளியேறும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அதற்காக அடிக்கடி பதவி உயர்வுகளை அளிப்பதற்கு மில்லியன் கணக்கில் செலவழிப்பதற்கும் இடையே ஒரு முக்கியமான போரை இத்துறை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் இந்த நடவடிக்கை IT நிறுவனங்களுக்கு நஷ்டத்தை கொடுத்தாலும், இது பல புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இந்திய சந்தையில் முதல் மூன்று இடங்களை வகித்திருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவற்றில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் டாடா குழும நிறுவனமான டிசிஎஸ், அதிக சந்தை மூலதனம் மற்றும் மிகப்பெரிய பணியாளர் எண்ணிக்கையுடன் தொழில் துறையில் முதன்மை இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தற்போது அதிக ஊழியர்களின் இழப்பைக் கட்டுப்படுத்த பல புதியவர்களை தீவிரமாக பணியமர்த்துகின்றன.

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அடுத்ததாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் விகிதம் இன்ஃபோசிஸ் அதிகமாகவும், விப்ரோவில் இரண்டாவது அதிகமாகவும், பின்னர் டிசிஎஸ்ஸில் அதிகமாகவும் உள்ளது. இதில் டிசிஎஸ் நிர்வாகத்தின் தேய்வு விகிதம் தற்போது குறைந்து வருவதாகவும், சில காலாண்டுகளுக்குப் இந்த எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் TCS நிறுவனம் சுமார் 1.03 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்ஃபோசிஸ் 85,000 எனவும் விப்ரோவில் 45,416 எனவும் பதிவாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!