தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!

0
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி நிர்வாகங்களும், மாணவர்களும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு ஏற்ற சூழ்நிலை அமையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பிற மாநிலங்களில் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 10 அடல் ஆய்வகங்கள் – இஸ்ரோ அறிவிப்பு!!

தமிழகத்தில் 10 மாற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கு பெற்றோர்களும் அனுமதி அளித்த நிலையில் பள்ளிகள் வருகிற 19-ஆம் தேதி திறக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு குறித்து பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

1.ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மீதமுள்ள மாணவர்கள் வேறு அறை ஒதுக்கி அவர்களுக்கான பாடங்களை நடத்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

2. மாணவர்கள் பாடங்களை விரைவில் முடிக்க சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் & மருத்துவ உதவியாளர் பணி – 200 பேர் தேர்வு!!

3. பள்ளி வளாகங்களில் கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களின் நலனில் பள்ளிகள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

4. தினமும் வெப்ப பரிசோதனை கொண்டு உடல் வெப்பநிலை அறிய வேண்டும். கைகளை சுத்தமாக வைக்க தேவையான சோப்பு மற்றும் சானிடைசர் பள்ளிகள் தங்களது செலவில் வழங்க வேண்டும்.

5. கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாணவர்களை எந்த தூய்மைப் பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது.

6.ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தாமல் வேறு வழியில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

7. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிய கூடாது. மாணவர்கள் பள்ளிகளில் சமூக இடைவெளியை பயன்படுத்தி உள்ளே வரவும், வெளியே செல்லவும் வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!

8. இறைவணக்கம், விளையாட்டு, கலைநிகழ்ச்சி, என்எஸ்எஸ் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

9.பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை குறித்த தொகுப்பினை பராமரிக்க வேண்டும்.

10. மருத்துவ உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகலாம்.

11. பள்ளி அலுவலகங்கள், கணினி ஆய்வகம் மற்றும் வேதியியல் ஆய்வகங்களில் குளிர்சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது. ஆய்வகங்களில் 2 பேராக ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்.

12.மாணவர்களின் வகுப்பறைகள் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். மாணவர்கள் மதிய உணவு பகிர்ந்துகொள்ள கூடாது.

13.பள்ளிகளில் விடுதிகளில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!