தமிழகத்தில் 68,775 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – புதிய தொழிற்கொள்கை!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொழில் முன்னேற்றத்திற்கு வழி செய்யும் நோக்கில் புதிய தொழில் கொள்கையை சென்னையில் வெளியிட்டார்.
புதிய தொழில் கொள்கை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் இன்று முதல்வர் பழனிசாமி புதிய தொழில் கொள்கை 2021, சிறுகுறு நடுத்தர தொழில் கொள்கை வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் தயார் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த புதிய கொள்கை வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்படுகின்றன. இந்த புதிய தொழில் கொள்கைக்காக ரூ.28,053 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் நியமனம் – அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு!!
இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில், “தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது”, என கூறினார். மேலும் சென்னையில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்