தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு செயல்முறைகள் – மாவட்ட கல்வி இயக்குனர் வெளியீடு!!

1
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு செயல்முறைகள் - மாவட்ட கல்வி இயக்குனர் வெளியீடு!!
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு செயல்முறைகள் - மாவட்ட கல்வி இயக்குனர் வெளியீடு!!
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு செயல்முறைகள் – மாவட்ட கல்வி இயக்குனர் வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான செயல்முறைகளை தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிப்பாணையாக வெளியிட்டுள்ளார்.

பதவி உயர்வு செயல்முறைகள்:

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து தகுதியான ஆசிரியர் பட்டியல் பதவி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விதிகளுக்குட்பட்டு தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – அரசு தேர்வுத்துறை வெளியீடு!!

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்:

1. தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அட்டவணை படி தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

2.வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்ட தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் மூலமாக குழு அமைக்கப்பட்டு அவர்களை கல்வி மாவட்ட தலைமை இடத்தில அமைக்கப்பட்ட முகாமில் ஆசிரியர் பட்டியல் சரிபார்க்க வேண்டும். அதனை மாவட்ட கல்வி அலுவலர் அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்ட தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்த மாவட்ட வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். இதன் நகலை அனைத்து ஆசிரியர்களிடமும் வழங்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

3.இவ்வாறு வெளியிடப்பட்ட இந்த பட்டியல் தொடர்பான எதாவது தவறு குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதனை வட்டார கல்வி அலுவலர் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை குறிப்பிட்ட தேதிக்குள் செய்ய வேண்டும். அதற்கு பின் வழங்கப்படும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு இறுதி செய்யப்பட்ட பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்கி வைத்திருக்க வேண்டும். இந்த பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

4.மேலும் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில், 31.12.2020 தேதிக்குள் துறை அனுமதியுடன் தேர்ச்சி பெற்ற உயர்கல்வி விவரத்தினை சார்ந்த வட்டார கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து அதற்கான உரிய பதிவுகளை பணி பதிவேட்டில் பதிவு செய்தால் மட்டுமே பெயர் சேர்க்க வேண்டும்.

தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!

5. அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளை அரசு பள்ளிகளாக ஏற்று கொண்ட பின்னர் அப்பள்ளிகளின் ஆசிரியர்களை அரசு பணிக்கு ஈர்த்துக்கொண்டு அரசால் ஆணை வெளியிட்ட பின்னர் தான் அந்த ஆசிரியர்களை அந்த ஒன்றியத்தில் வைத்து தேர்ந்தெடுத்தோர் பட்டியலில் எடுத்து கொள்ள வேண்டும்.

6. தொடக்கக்கல்வித்துறையில் பயிற்றுவிக்கும் பாடங்களை பயின்று பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர்களை மட்டுமே பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

7. பதவி உயர்வு துறப்பு செய்த ஆசிரியர்களின் பெயர் உரிய விதிகளின்படி தேர்ந்தோர் பட்டியலில் இடம் பெற வேண்டும். குறிப்பில் திறப்பு செய்த நாள் மாதம் ஆண்டு மற்றும் ஆணை எண் குறிப்பிட வேண்டும்.

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – தேதி அறிவிப்பு!!

8. ஒன்றிய அளவில் ஆசிரியர்களிடம் பெறப்படும் குறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் தீர்வு காணப்பட்டு ஆசிரியர்களுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர் மூலம் ஆணை அனுப்பிய விவரங்கள் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

9. தமிழ்நாடு குடிமுறைப்பணி விதிகளில் விதி 17 கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.

10. தமிழ்நாடு குடிமுறைப்பணி விதிகளில் படி ஒழுங்கு நடவடிக்கைகளில் நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கலாம்.

11. ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் / தண்டனை பெற்றிருந்தால் ஓராண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.

அம்மா மினி கிளினிக் பணி நிரந்தரம் கிடையாது – சென்னை ஆணையர் தகவல்!!

12. ஒழுங்கு நடவடிக்கைகளில் கண்டனம் தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டுகள் காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக்கூடாது.

13. crucial date அன்று சிறப்பு விதிகளில் சொல்லப்பட்ட தகுதிகள் இருத்தல் வேண்டும். தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் பதவி உயர்வு வழங்கப்படும் நாளுக்குள் குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டால் பதவி உயர்வு வழங்கக்கூடாது.

14. பார்வையில் தெரிவித்துள்ள தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலை பணிகள் சிறப்பு விதிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் 2016 பிரிவு 7,40,41,66 அரசாணை 368 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள் 18.10.1993 மற்றும் நடைமுறைகளிலும் விதிகள் சட்டம் அரசாணைகளின் படி பட்டியல் தயார் செய்திட வேண்டும்.

தமிழக அரசு பணியாளர்கள் ஈட்டிய விடுப்பு – மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்!!

15.அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும் போது பதவி உயர்வுக்கு தேவையான உரிய கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவுக்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

16. முன்னுரிமை பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியலில் தயாரித்தல் சார்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் தொடர்ந்திருந்தால் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் இடைக்கால தீர்ப்பாணை மற்றும் இறுதி தீர்ப்பின் படி செயல்பட வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. டிபார்ட்மெண்ட் வழி பணியிட மாறுதல் பெறுபவர்கள் மாற்றம் கொண்டு வர பாடுபட்டவர்களாக கருத வேண்டும்.அதை நேரடி விசாரனை செய்யவில்லை என்றால் கழகம் பிரச்சினை ஆகி விடும்.அனைவரும் ஒன்றாக ‌‌செயல்படநினைத்தால் குற்றம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!