NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – அரசு தேர்வுத்துறை வெளியீடு!!

0
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு - அரசு தேர்வுத்துறை வெளியீடு!!
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு - அரசு தேர்வுத்துறை வெளியீடு!!
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – அரசு தேர்வுத்துறை வெளியீடு!!

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான தகுதித் தேர்வின் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

NMMS தேர்வு:

2020-2021ம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடக்க இருப்பதாக ஜனவரி மாதம் அரசு தேர்வுதுறை இயக்குனரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடக்க உள்ளது.

தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!

விண்ணப்பம்:

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க முதலில் ஜனவரி 8 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் மாணவர்களின் கோரிக்கை கருதி ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது. மேலும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களையும் இணையம் வழியாக அரசு தேர்வுகள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நுழைவு சீட்டு:

பிப்ரவரி 21ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வுக்கான நுழைவு சீட்டினை மாணவர்கள் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்த பிறகு தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி அறிக்கை அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!