தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – 70% மாணவர்கள் வருகை!!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - 70% மாணவர்கள் வருகை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - 70% மாணவர்கள் வருகை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – 70% மாணவர்கள் வருகை!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 70 சதவிகித மாணவர்கள் மட்டுமே வகுப்புக்களுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் வருகை விகிதம்:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாக பள்ளி மாணவர்களுக்கு பரவி வருவதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுரை வழங்கப்பட்டது, ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக +2 அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியல் – கால அட்டவணை வெளியீடு!

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் மற்றும் புனித வெள்ளி காரணமாக ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. எனவே பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 70 சதவிகித மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர். இந்த சூழ்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் பொதுத்தேர்வுகள் ரத்து அல்லது ஒத்தி வைப்பது குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here