தமிழகத்தில் 7 புதிய அரசுப்பள்ளி கட்டடங்கள் – முதல்வர் திறந்து வைப்பு!!

0
தமிழகத்தில் 7 புதிய அரசுப்பள்ளி கட்டடங்கள் - முதல்வர் திறந்து வைப்பு!!
தமிழகத்தில் 7 புதிய அரசுப்பள்ளி கட்டடங்கள் - முதல்வர் திறந்து வைப்பு!!
தமிழகத்தில் 7 புதிய அரசுப்பள்ளி கட்டடங்கள் – முதல்வர் திறந்து வைப்பு!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 7 அரசு பள்ளிகளின் கட்டடங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் அறிவிப்பு:

தமிழக முதல்வர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளிக் காட்சி மூலம் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலை பள்ளிகளின் கட்டடங்களை திறந்து வைத்தார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லாக் கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், ஊக்கத்தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

லைசென்ஸ் வாங்க புதிய நடைமுறை – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!!

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம், கழிவறை போன்றவை கட்டடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள 3 அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில் 5 கோடியே 81 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள், ஆய்வகம் போன்ற பள்ளி கட்டடங்களை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

காமராஜர் கல்வி உதவித்தொகை பெற பொருளாதார அளவுகோல் – ஆளுநர் உத்தரவு!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் முல்லை, பள்ளியில் நடந்த விபத்தின் போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எந்த காயமும் இல்லாமல் கைப்பற்றியபோது படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை பாராட்டி, அரசு அவருக்கு உண்டான செலவிற்கான 14 லட்சத்து 8 ஆயிரத்து 334 ரூபாய் பணத்தை காசோலையாக முதல்வர் வழங்கினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!