தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

வட தமிழக கடலோரம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கிழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, தமிழகத்தில் 16.05.2022 முதல் 20.05.2022ம் தேதி வரை இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் தீவிரமடைந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் தமிழகம்,புதுவை உள்பட தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்‌சி மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி,கோவை, திருப்பூர்‌, தேனி, இண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருச்சியில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி,கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு இல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here