தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை – வானிலை மையம் அறிவிப்பு !
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வரும் நாட்களில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து முழு விவரத்தையும் தற்போது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
இன்று (ஏப்ரல் 8) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவ வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 09.04.2021 முதல் 12.04.2021 வரை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்தில் 88 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ரத்து !
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்ஸியஸாக ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




