தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை

0
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி , திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

19.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.06.2022, 21.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.06.2022, 23.06.2022: வடதமிழகம்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!