தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

0
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு - அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு - அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வதாக இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு, அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல்வர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்த செய்திக்குறிப்பை இந்த பதிவில் காணலாம்.

முதல்வரின் உடல்நிலை:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் மே மாதம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். திமுக ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களும், மக்களின் நலனிற்காக பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது. இவை அனைத்தும் வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருக்க கூடாது, மாநிலத்தின் கடைக்கோடி குடிமகன் வரை அரசின் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாது கலந்து கொள்வார்.

திருப்பதி தரிசனத்திற்கு செல்கிறீர்களா? தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு! பக்தர்கள் நிம்மதி!

இந்நிலையில், இன்று ‘மகுடம் மறுத்த மாமனிதன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் இதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் முதல்வருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் நிகழ்ச்சியில் கூறினார். மேலும், முதல்வரின் உரையை துறை முருகன் அவர்கள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து அரசின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனால் நாளை நடக்கவிருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றும், இதன் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!