நீலகிரி, கோவையில் கனமழையுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
நீலகிரி, கோவையில் கனமழையுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை அறிக்கை!
நீலகிரி, கோவையில் கனமழையுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை அறிக்கை!
நீலகிரி, கோவையில் கனமழையுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மற்றும்‌ ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்சிய மாவட்டங்களில்‌ பொதுவாக மேகமூட்டத்துடனும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

24.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌
வறண்ட வானிலையும்‌ நிலவக்‌கூடும்‌.

HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு!

25.07.2021, 26.07.2021: வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ நிலவக்‌கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

22.07.2021 முதல்‌ 24.07.2021 வரை: தமிழக கடலோரம்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

22.07.2021 முதல்‌ 26.07.2021 வரை: தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

22.07.2021 முதல்‌ 26.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்‌தீவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

22.07.2021 முதல்‌ 26.07.2021 வரை: தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய மேற்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ வடக்கு அரபிக்கடல்‌, பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!