தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று (ஜூலை 2) சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடனுதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

03.07.2021 அன்று சேலம், தர்மபுரி , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி , தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.07.2021 அன்று சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 05.07.2021 அன்று வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.07.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆண்டிபட்டி 1 செமீ, கே.சி.எஸ்.மில் அரியலூர் 11 செமீ, மதுரை தெற்கு, தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.பாடாலூர், பாலக்கோடு, புவனகிரி தலா 9 செமீ, பேச்சிப்பாறை 8 செமீ, தாத்தையங்கார்பேட்டை, ஆத்தூர், திருவையாறு தலா 7 செமீ, பாவனிசங்கர், குளித்தலை தலா 6 செமீ, தருமபுரி, விராலிமலை தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று (ஜூலை 2) முதல் 04.07.2021 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35-45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். எனவே இந்த பகுதிக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இன்று (ஜூலை 2) முதல் 06.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!