தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 15 வரை கனமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதை அடுத்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

வானிலை மையம் அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக – வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

11.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழகம்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, கடலூர்‌, அரியலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.04.2022: தென்தமிழக மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழக மாவட்டங்கள்‌ ஓரிரு இடங்களிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.04.2022: உள்‌ தமிழகம்‌, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

15.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌யஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!