பொறியியல் படிப்பு கலந்தாய்வு – இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

0

பொறியியல் படிப்பு கலந்தாய்வு – இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு:

நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாத நிலையில், பொறியல் கலந்தாய்வு தாமதமானது. இதனால் மாணவர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தும் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்கப்படும் என்றும் பொறியியல் மாணவ சேர்க்கைக்கு என்றும் கூறியுள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள்  http://tneaonline.in/ என்ற இணைய தளம் மூலம் பொறியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் 16.08.2020 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் , தற்போதைய சூழலில் 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

Apply Link

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!