தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு – முதல்வர் அறிக்கை!

0
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு - முதல்வர் அறிக்கை!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு - முதல்வர் அறிக்கை!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு – முதல்வர் அறிக்கை!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் அறிக்கை:

“திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறது என்றால் அது கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஓர் இனத்தின் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கும் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆறாவது முறை அடைந்த மாபெரும் வெற்றி ஆகும்.

ஒவ்வொரு முறை கழகம் வெற்றி பெறும்போதும் தமிழ் வெற்றி பெறுகிறது தமிழர் வெற்றி பெறுகின்றனர் தமிழ்நாடு வெற்றி பெறுகிறது தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய ஒன்றியத்தில் மக்களாட்சி மாண்புக்கு வெற்றி கிடைக்கிறது. இதன் மூலமாக இந்த பூமிப்பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மகிழும் மகிழ்ச்சிமிகுகாலமாகக் கழக ஆட்சிக்காலம் அமைந்து வருகிறது

உடன்பிறப்பே என்ற ஒற்றைச் சொல்லால் அனைவரது உள்ளங்களையும் வென்றெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரின் கனவான கழக ஆட்சி கடந்த மே-7 ஆம் நாள் அமைந்தது. அவரால் வார்ப்பிக்கப்பட்ட நானும், அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அமைச்சரவைச் சகாக்களும் இணைந்து அமைத்த ஆட்சியானது இன்றுடன் 100 ஆவது நாளை எட்டுகிறது.

இன்று மிக முக்கியமான நாள் 1950-ஆம் ஆண்டு சமூகநீதிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது ஆகஸ்ட் 14-ஆம் நானைத்தான் வகுப்புரிமை நாளாக அறிவித்து தந்தை பெரியார் போராட்டம் தொடங்கினார் அந்தப் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அத்தகைய முக்கியமான நாள் தான் இந்த ஆகஸ்ட்-14. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில்தான் நமது அரசு நூறாவது நாளை எட்டுகிறது.

தமிழகத்தில் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட் தாக்கல்!

ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான் ஆனால் இந்த 100 நாட்களின் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காத்தல் எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறையை மாற்றுதல்

  • மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்
  • ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
  • கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 இலட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்
  • இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகைப் பொருட்கள்
  • குடும்பத்தலைவிகளுக்கு ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான 1000 பயனாளிகள் தேர்வு
  • நமக்கு நாமே அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

என முத்தான பத்துத் திட்டத்தை வழங்கி இருக்கிறோம் 120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள் முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன் இந்த 100 நாட்களில் கழக அரசு செய்த சாதனைகளின் மூலமாக. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே’ என்று வருந்துகிறார்கள் இதுதான் இந்த ஆட்சியின் மகத்தான மாபெரும் சாதனையாகும். ஏழை, எளிய மக்களின் மனம் குளிரும் அரசாக என்றும் செயல்படுவோம்.

தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலமாக மனுக்களைப் பெற்றேன் இந்த மனுக்களை 100 நாட்களில் தீர்ப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கினேன். அப்படி நிறைவேற்றாவிட்டால் என்னைக்கேள்வி கேட்கலாம் என்றும் சொன்னேன். பெட்டியில் வைத்துப் பூட்டினேன் கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியை அமைத்தாலும் அந்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித்துறை உருவாக்கப்பட்டது இதுவரை பெறப்பட்ட 4,57 லட்சம் மனுக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

TN Agri Budget 2021 Live Updates – தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!

இத்துறை உருவாக்கப்பட்ட பத்தாவது நாள் முதலே கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கிளோம். இதுவரை 2.29 லட்சம் மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொன்னாலும் அதை நிராகரிக்கவில்லை அந்தக் கோரிக்கையை வைத்தவர்கள் அரசிடமே மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறோம் ஒவ்வொரு மனுதாரரையும் அரசு அலுவர்கள் அழைத்துப் பேசி இருக்கிறார்கள் பயன் பெற்றவர்கள் அளிக்கும் பேட்டிகளை ஊடகங்களில் நான் பார்க்கும்போது நான் நெகிழ்ந்து போகிறேன்.

இது தனிப்பட்ட ஸ்டாலினின் சாதனை அல்ல மக்களின் சாதனை. உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் இது.

ஸ்டாலின் இந்தப் பெட்டியைத் திறக்கவே முடியாது அவரால் ஆட்சிக்கு வரவே முடியாது கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவதாக மக்களை ஏமாற்றுகிறார்’ என்று தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் ஏளனம் செய்தார்கள் அந்தக் குறுமதியாளர்களின் ஏளனம் இந்த 100 நாட்களில் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது. தனியொரு மனிதன் நினைத்த கனவானது. ஒரு அரசாங்கத்தின் கனவாக மாறி இவ்வளவு விரைவாக நிறைவேறும் என்று மக்களே எதிர்பார்க்கவில்லை. இத்தகைய வியப்புகள் நிறைந்ததாக எமது அரசு என்றும் செயல்படும்!

இன்றைய தினம் ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறேன். தகுதிபடைத்த அர்ச்சகர்கள். ஆலயப் பணியில் ஈடுபட அவர்களது சாதி தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட இயக்கத்தின் மனித உரிமைக் குரல் ஆகும். சுயமரியாதை இயக்க காலம் முதல் பல்வேறு ஊர்களில் கோயில் நுழைவு உரிமையை நிலைநாட்டியது தமிழ்நாடு ஆகும் ஆனால் அந்த ஆலய நுழைவு உரிமைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை தந்தை பெரியாரின் கோரிக்கையை ஏற்று 1970-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனாலும் பெரியாரின் காலத்தில் அது நிறைவேற இயலாமல் போய்விட்டது.

பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தைஎழுந்து நடமாட வைக்க முடியவில்லை பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக 2006-ஆம் ஆண்டு மீண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இப்போது நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வு வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கனவை கலைஞர் முன்னெடுத்ததைச் செயல்படுத்தி வருகிறேன் என்ற பெருமகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது. இத்தகைய கொள்கைப்பூர்வ,அரசாக என்றும் செயல்படுவோம்!

TN Job “FB  Group” Join Now

அரசியலையும் மக்கள் பணியையும் தொழிலாகக் கருதுபவனல்ல நான் அதை வாழ்க்கையாக, மூச்சாகக் கருதுபவன் 23 வயதில் இந்திய நாட்டின் ஜனநாயகம் காக்கப்பட நெருக்கடி நிலையை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்டவன் நான். ஸ்டாலின் அரசியலுக்கு அழைத்து வரப்படவில்லை. இழுத்து வரப்பட்டவன்’ என்று ஒரு வரியில் எனது அரசியல் வாழ்க்கையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள் இன்று அதை நினைத்துப் பார்க்கிறேன். நாளைய தினம், பழம்பெருமை வாய்ந்த சென்னைக் கோட்டை கொத்தளத்தில் இந்தியத் திருநாட்டின் எழுச்சிமிகு சின்னமான தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறேன் அதுவும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிகு தருணத்தில் ஏற்றப்படும் புகழ்க் கொடி அது.

மக்களுக்காக உண்மையாக உழைத்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் தனிப்பட்ட மரியாதை அல்ல இது கழகத்தின் இலட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எண்ணமும். கழகத்துக்காக வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பும் இணைந்து என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது அதுதான் என்னைச் செயல்பட வைக்கிறது. அதுதான் என்னை உழைக்க வைக்க வைக்கிறது. நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் 100 நாட்கள் அளித்த உற்சாகத்தால் நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம். சாதனைகளால் சொல்வோம்.

“இது என் அரசல்ல உங்களில் ஒருவனின் அரசு. உங்களின் அரசு!” என அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!