TN Agri Budget 2021 Live Updates – தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!

0
TN Agri Budget 2021 - தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!
TN Agri Budget 2021 - தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!
TN Agri Budget 2021 – தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தனது உரையில் தெரிவித்தார்.

வேளாண் பட்ஜெட்:

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவிஏற்ற பிறகு முதல் பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம், நாட்கள் உயர்வு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மற்றும் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு மற்றும் வெவ்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்த பிறகே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்தார். வேளாண் பட்ஜெட் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

 அமைச்சர் உரை – Live Updates :

  • வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் செய்வது என்பது தொலைநோக்கு திட்டமாகும்.
  • தஞ்சை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தோம்.
  • 10,000 ஆண்டுகளுக்கு முன்னாள் நிகழ்ந்த புரட்சியே மனிதனைப் பண்பட்டவனாக மாற்றியது
  • தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75%ஆக உயர்த்த நடவடிக்கை.
  • தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் உள்ளது.
  • உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது.
  • இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.
  • பழப்பயிர் சாகுபடிக்கு ரூ.29.12 கோடி, கரும்பு விவசாயிகளுக்கு ரூ.40 கோடி, இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்கு ரூ.21.80 கோடி ஒதுக்கீடு.
  • முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்.
  • தமிழகத்தில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
  • பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்படும்.
  • ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும்.
  • மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள்.
  • படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மதிய உணவு திட்டத்திலும், ரேஷன் கடையிலும் பயறு வகைகள் விநியோகம்.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  • சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.
  • நெல் ஜெயராமனின் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.
  • திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு விதை உற்பத்தி நிலையங்களில் 200 ஏக்கருக்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்.
  • கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.
  • கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் ஒன்றிய – மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
  • 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.
  • பயிர்காப்பீடு திட்டத்தில் விரைவில் 2வது தவணையாக ரூ.1,248.92 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு விடுவிப்பு.
  • காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் அல்லது இடுபொருள் வழங்கப்படும்.
  • உழவர்களுக்கு வேளாண் கருவிகள் தர ரூ.15 கோடி செலவில் வேளாண் உபகரணங்கள் தொகுப்பு செயல்படுத்தப்படும். தோட்டக்கலைத்துறையினர் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.
  • கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.
  • நவீன முறையில் பூச்சிமருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு.
  • 1.50 லட்சம் ஹெக்டேரில் நுண்ணீர் பாசன திட்டம் ரூ.982.48 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
  • 1,700 நீர் சேமிப்பு கட்டமைப்புகளில் ரூ.5 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட புதிதாக இயந்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1 லட்சம் செலவில் 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.  காய்கறிக்கழிவு உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.
  • 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.  50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
  • உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை, உழவர் சந்தை விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்.
  • மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம்
  • முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்துக்காக ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள்
  • முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்.  7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்.
  • இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை.
  • மீன் பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில் கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!