தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று முதல் (ஜூன் 28) தொடங்கி இருக்கிறது. மாணவர் சேர்க்கை குறித்த முழு விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம்.

மாணவர் சேர்க்கை:

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான இளமறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிக்க இணையதள சேவை இன்று (ஜூன் 28) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஜூலை 27 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 இளம் அறிவியல் பாடபிரிவுகளில் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில 2337 இடங்களும் உள்ளன.

Exams Daily Mobile App Download

இந்த பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு என அனைத்தும் இணையதளம் மூலமாக தான் நடைபெறும்.  இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு சுமார் 971 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடபிரிவுகளை தேர்வு செய்ய முடியும். ஒரு நபர் ஒவ்வொரு பாட பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.

அஞ்சல் துறை மூலம் டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழ்? எளிய வழிமுறைகள் இதோ!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnau.ac.in என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்து கொள்ளலாம். வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. அதில் மொத்தம் 982 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விரிவாக்க கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் என பல இடங்களில் பணிகளில் இருக்கின்றனர். இந்த பல்கலைக்கழத்தில் 8 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை. அதனால் ஆசிரியர் மாணவர்கள் வேறுபாடு விகிதம் இருக்கிறது. அரசின் கவனத்திற்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்ததும் வேளாண் பாடதிட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும். மாணவர்களுக்கு செப்டெம்பர் மாதத்தில் இருந்து வகுப்புகள் நடத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!