தமிழக 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!

0
தமிழக 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!
தமிழக 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!
தமிழக 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!

கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஜூன் 20) மதியம் 12 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முடிவுகள்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் முடிவடைந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடைத்தாள்களை திருத்துதல் மற்றும் பதிவேற்றுதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஜூன் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே இன்று (ஜூன் 20) வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகள் கழித்து தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் இன்று (ஜூன் 20) வெளியாகி இருக்கும் தேர்வு முடிவுகளை உற்சாகமாக தெரிந்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று மதியம் 12 மணியளவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 670 பேர் தேர்வு எழுதியதாகவும், அதில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதன் படி தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே, அதாவது 8.55% என அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதியம் 12 மணிக்கு வெளியாகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் SMS மூலமாகவும் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Download TN 10th Result

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!